தமிழில் விளையாட்டு செய்திகள், விளையாட்டு வீரர்களின் Biography ,மேலும் . . . . .

Saturday, July 31, 2010

டியகோ மரடோனா (Diego Armando Maradona)

கால்பந்து வரலாற்றின் உச்ச நட்சத்திரமான மரடோனாவை பற்றி எவ்வளவு எழுதினாலும் அது முழுமையாகாது. இவர் எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த FIFA வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்ட மரடோனா கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகன். மரடோனா தனது தொழில்வாழ்க்கையில் அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற சிறந்த அணிகளுக்காக விளையாடி ஒப்பந்தப் பண அளவில் உலக சாதனை செய்துள்ளார். தனது வாழ்கையில் யாரும் காண முடியாத ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட மரடோனாவை பற்றி பேசும் பொது பேலேயுடன் இவரை ஒப்பிடாமல் பேசுவது சிக்கலானதே. உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்பதே அந்த சிக்கல். இரண்டு தரப்பு ரசிகர்களையும் அனுசரித்து கூறுவதானால் பேலேயை சிறந்த striker என்றும் மரடோனாவை சிறந்த midfielder என்றும் கூறி விடலாம். நூற்றாண்டின் சிறந்த வீரரை தேர்ந்தெடுக்க 2000 ஆம் ஆண்டு ஒரு வாக்கெடுப்பை இணையத்தில் FIFA நடத்தியது. 53.6% ஓட்டுகளைப் பெற்று மரடோனா முதலாவதாக வந்தார். பின்னதாக, விருதை எவ்வாறு மற்றும் யாருக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக "FIFA FOOTBALL FAMILY" என்ற குழுவில் கால்பந்தாட்ட வல்லுநர்களை அமைத்து பீலேவிற்கு விருதை எதிர்நிலையாக அறிவித்தது. செயல்முறையில் மாற்றம் கொண்டு வந்ததற்கு மரடோனா எதிர்ப்பு தெரிவித்தார், மேலும் தனக்கு பதிலாக பீலேவிற்கு விருது அளிப்பதாக இருந்தால் அந்த விழாவில் கலந்து கொள்வதில்லை என்றும் அறிவித்தார். இறுதியில் இரண்டு விருதுகள் உருவாக்கப்பட்டு இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த விருதை மரடோனா ஏற்றுக் கொண்டார், ஆனால் விருதைப் பெற்றவுடன் பீலே வரும் வரை காத்திருக்காமல் விழாவை விட்டு வெளியேறினார். லண்டனைச் சேர்ந்த செய்தித்தாள் நிறுவனமான த டைம்ஸ் இதழ் ( THE TIMES )எல்லாக் காலங்களிலும் சிறந்த பத்து உலகக் கோப்பை வீரர்களில் மரடோனாவை முதலாவதாக 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்வு செய்தது.

இவர் மூன்று பெண்குழந்தைகளுக்கு பிறகு பிறந்த முதல் மகனாவார். இவருக்கு ஹூகோ மற்றும் எட்வர்டோ என இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். இவர்களும் பிரபலமான தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்கள். புறநகர் பகுதியில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்த மரடோனா ஒரு கால்பந்து வீரராக ஆகுவதற்கு எந்த ஒரு சாதியமும் காணப்படவில்லை. மரடோனாவின் குடும்ப நிலைமை மரடோனா விளையாட ஒரு கால்பந்து வாங்க கூட இடம் அளிக்கவில்லை. அதிஷ்ட வசமாக அந்த இ
டத்தில் இருந்த வேறு ஒரு சில சிறுவர்களிற்கு அந்த வசதி இருந்ததால் அவர்களுடன் மரடோனவால் கால்பந்து ஆட முடிந்தது. தெருக்களின் கால்பந்த ஆடி வந்த மரடடோனவின் அபரிமித திறமை அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியை கவர அவரது 10 ஆவது வயதில் அர்ஜென்டினா ஜூனியர்ஸ்'இன் கனிஷ்ட அணிக்கு அழைகப்பட்டார்.

கனிஷ்ட அணியில் மரடோனாவிலும் பார்க்க உயரம் குறைந்தவர்களெல்லாம் மரடோனாவிலும் பார்க்க உயரமாக வளர்ந்த போதும் மரடோனாவின் உயரம் குறைவாகவே இருந்தது. தனது குறைந்த உயரத்தையும் அனுகூலமாகவே பயன்படுத்திய மரடோனா எதிர் அணி வீரர்களை திறமையாக சமாளித்ததுடன் பந்தையும் சிறப்பாக கட்டுப்படுத்தினர். இந்த திறமை அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணிக்காக 1976 ஆம் ஆண்டு விளையாட வழி செய்தது. 1981 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவின் மிகச் சிறந்த கழகங்களின் ஒன்றான Boca Juniors இல் இணையும் வரை 5 வருடங்கள் அர்ஜென்டினா ஜூனியர்ஸ் இல் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார் அன்றைய இளம் வீரர் மரடோனா.

மரடோனா'இன் சுருக்கமான வரலாறு :

முழு பெயர் : டியகோ அர்மண்டோ மரடோனா (Diego Armando Maradona )
பிறப்பு : 30 -அக்டோபர்-1960
இடம் : லனஸ் , அர்ஜென்டினா (Lanús, Argentina)

உயரம் : 1.65 m (5 ft 5 in)

கழகம் :
கனிஷ்ட அணி :
அர்ஜென்டினா ஜூனியர்ஸ் 1975
சிரேஷ்ட அணி :
வருடம் அணி போட்டிகள் கோல்கள்
1976–1981 Argentinos Juniors 167 (115)
1981–1982 Boca Juniors 40 (28)
1982–1984 Barcelona 36 (22)
1984–1991 Napoli 188 (81)
1992–1993 Sevilla 26 (5)
1993–1994 Newell's Old Boys 7 (0)
1995–1997 Boca Juniors 30 (7)
மொத்தம்

490 (311

சர்வதேச
போட்டிகள் :
அர்ஜென்டினா (1977 - 1994 ) : போட்டிகள் - 91 கோல்கள் - 34


1982 உலக கிண்ண தொடரும் பார்சலோனா கழகமும் ;

Boca Juniors இற்கு நிலையாக ஆடி வந்தாலும் 1982 உலக கிண்ண தொ
டருக்கு முன்னர் அர்ஜென்டினா அணிக்காக ஒரு சில போட்டிகளிலேயே விளையாடியிருந்த மரடோனா 1982 உலக கிண்ண தொடருக்கு அர்ஜென்டினா அணிக்காக விளையாட அழைக்கபட்டார். எல்லோரினதும் ஆச்சரியம என்னவென்றால் அந்த இளம் அர்ஜென்டின கால்பந்து வீரன் அர்ஜென்டினா அணி விளையாடிய 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடியதுதான். அத்துடன் மரடோனா ஹங்கேரி அணியுடனான போட்டியில் 2 கோல்களையும் போட்டார்.
இவரின் திறமை ஐரோப்பிய ஜாம்பவனாகிய பார்சலோனா கழகத்தை கவர பார்சலோனா கழகம் மரடோனாவை £5 மில்லியன் இற்கு வாங்கியது. இது அன்றைய காலத்தின் உலக சாதனை பரிமாற்ற தொகையாகும். முதலில் ஏற்பட்ட கல்லீரல் வீ
க்கம், பிறகுஏற்பட்ட கால் முறிவு ஆகியவற்றினால் மரடோனாவின் தொழில் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. எனினும் மரடோனாவின் வலிமை மற்றும் மனத் திண்மை விரைவில் இவரை மைதானத்திற்கு கொண்டு வர காரணமாக இருந்தது. பார்சிலோனா அணியில் இருக்கும் போது அணி இயக்குனர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் இவரால் பார்சலோனாவில் அதிக காலம் விளையாட முடியவில்லை.

நபோலி (NAPOLI )

இத்தாலியின் சாதாரண கழகமான நபோலி மரடோனவை £6.9மி என்ற மற்றொரு சாதனை தொகைக்கு பார்சலோனாவிடம் இருந்து மரடோனாவை வாங்கியது.
மரடோனா நபோலி அணியில் இருந்த போது புகழின் உச்சிக்கு சென்றார். விரைவில் அவர் கழக ரசிகர்களிடையேயும் இத்தாலிய ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக மாறினார். தர வரிசையில் நடு இடத்தில் இருந்த நபோலி அணிக்கு மரடோனா 1986 /87 பருவத்தில் இத்தாலிய கழகங்களிற்கிடையிலான லீக் போட்டி தொடரில் (Serie A) கிண்ணத்தை வென்று கொடுத்தார். அடுத்த இரண்டு தடவைகள் 2 ஆவது இடத்தை பிடித்த மரடோனாவின் அணி 1989 /90 காலப்பகுதியில் மீண்டும் கிண்ணத்தை வென்றது.

1986 உலக கிண்ண தொடர்

1986 உலக கிண்ண போட்டி தொடரில் திறமையின் உச்சத்தில் இருந்தார் மரடோனா. அனை
த்து ரசிகர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மரடோனா தனது ரசிகர்களில் எதிர்பார்ப்பை வீணாக்கவில்லை. அந்த தொடரில் மரடோனா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவரது சொந்த மண்ணில் நடைபெற்ற அந்த உலக கிண்ண போட்டி தொடரில் மரடோனா அர்ஜென்டினா அணியை தலைமை தாங்கி உலக கிண்ணத்தை வென்று கொடுத்தார். அந்த தொடரில் மொத்தமாக 5 கோல்களை போட்ட மரடோனா 5 தடவைகள் மற்ற வீரர்கள் கோல் போட வழிசெய்தார் ( 5 goals & 5 assets ) . மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார்.

கால் இறுதி எதிர் இங்கிலாந்து
- இந்த போட்டி மரடோனாவிலும் கால்பந்து ரசிகர்களாலும்
என்றும் மறக்க மடியாத போட்டி ஆகும். இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இவர் அடித்த இரண்டு கோல்கள் இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காக கால்பந்து வரலாற்றில் இடம் பெற்றது. ஒன்று மரடோனாவின் கையில்பட்டு பந்து இங்கிலாந்து வலைக்குள் விழ அதை நடுவர் தலையில் பட்டு சென்றது என்று நினைத்து கோலாக அறிவித்தார். அதை பற்றி பின்பு கூறுகையில் அதை "கடவுளின் கை" (hand of god ) என வர்ணித்தார். மற்றையது 60-மீட்டர் தொலைவிலிருந்து பந்தை பெற்ற மரடோனா இங்கிலாந்தின் ஆறு வீரர்களையும் கோல் காப்பாளரையும் தாண்டி இரண்டாவது கோலை போட்டார். இது இந்த "நூற்றாண்டின் சிறந்த கோல்" என்று சொல்லப்படுகிறது.
1986 உலக கிண்ண போட்டி தொடரில் உலக கிண்ணம், தங்கப்பந்தை வென்றெடுத்த மரடோனா அந்த வருடத்தின் சிறந்த வீரராகவும் அறிவிக்கப்பட்டார்.


1990 , 1994 உலக கிண்ண தொடர்கள் .

இத்தாலியில் நடைபெற்ற இந்த போட்டி தொடரில் மீண்டும் தலைமை பட்டியுடன் களம் இறங்கிய மரடோனாவிற்கு கணுக்கால் காயம் காரணமாக 1986 உலக கிண்ணம் போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை . இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது. 1994 தொடரில் 2 போட்டிகளிலேயே விளையாடிய மரடோனா போதை பொருள் சோதனையில் சிக்கி நாடு திருப்பப்பட்டார்.
அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து நான்கு உலகக் கோப்பை தொடரின் 21 போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கு கொண்டு எட்டு கோல்கள் மற்றும் எட்டு வழிகாட்டுதலையும் அமைத்து கொடுத்துள்ளார். அத்துடன் அணித் தலைவராக 16 முறை பங்கேற்று உலகக் கோப்பை-சாதனை படைத்துள்ளார். அத்துடன் அவர் பங்கேற்ற 4 தொடர்களிலும் கோல் அடித்துள்ளார்.

சர்ச்சைகளை தாண்டி ஒரு கால்பந்துவீரராக மரடோனாவை பார்த்தால் மரடோனாவை கால்பந்து விளையாட்டின் மன்னன் என்றே சொல்ல வேண்டும். கால்பந்தாட்டம் இருக்கும் வரையில் மரடோனவில் புகழ் மறையாமல் இருக்கும்.

கெளரவங்கள் :

கழகம் :

Argentina Boca Juniors

  • Primera División: 1981

Spain Barcelona

  • Copa del Rey: 1983
  • Copa de la Liga: 1983
  • Supercopa de España: 1983

Italy Napoli

  • Serie A: 1987, 1990
  • Coppa Italia: 1987
  • UEFA Cup: 1989
  • Supercoppa Italiana: 1990
அர்ஜென்டினா :
  • FIFA World Cup:
    • Winner: 1986
    • Runner-up: 1990
  • Artemio Franchi Trophy: 1993
  • 75th anniversary FIFA Cup: 1979
  • FIFA World Youth Player of the year :1979

தனிப்பட்ட கௌரவங்கள் :
  • Golden Ball for Best Player of the FIFA U-20 World Cup: 1979
  • Argentine league Top Scorer: 1979, 1980, 1981
  • Argentine Football Writers' Footballer of the Year: 1979, 1980, 1981, 1986
  • South American Footballer of the Year (El Mundo, Caracas):1979, 1986, 1989, 1990, 1992
  • Italian Guerin d'Oro: 1985
  • Argentine Sports Writers' Sportsman of the Year: 1986
  • Golden Ball for Best Player of the FIFA World Cup: 1986
  • Best Footballer in the World Onze d'Or: 1986, 1987
  • World Player of the Year (World Soccer Magazine): 1986
  • Capocannoniere (Serie A top scorer): 1987–88
  • Golden Ball for services to football (France Football): 1996
  • Argentine Sports Writers' Sportsman of the Century: 1999
  • "FIFA Goal of the Century" (1986 (2–1) v. England; second goal): 2002
  • Argentine Senate "Domingo Faustino Sarmiento" recognition for lifetime achievement:
  • FIFA Player of the Century

Sunday, July 18, 2010

போலோ மல்டினி (Paolo Cesare Maldini )


போலோ மல்டினி (Paolo Cesare Maldini )



AC மிலான் - இந்த பெயரை கேட்ட உடன் நினைவிற்கு வருவது மல்டினி தான். 1978 ஆம் வருடம் AC மிலான் கழகத்துடன் 10 ஆவது வயதில் தொடங்கிய இவரது வாழ்க்கை 2009 ஆம் வருடம் இவர் ஓய்வு பெறும் வரை தொடர்ந்தது. இத்தாலிய கால்பந்து வீரரான மல்டினி ( 26 ஜூன் 1968 ) தனது 25 வருட வாழ்கையை Serie A கழகமான மிலான் (AC MILAN ) உடன் தொடர்ந்து தனது 40 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். அத்துடன் இத்தாலி சர்வதேச அணிக்காக 14 (1988 -2002 ) வருடங்கள் விளையாடினார். இதே அணிக்காக 126 போட்டிகளில் பங்கு கொண்ட இவர் 7 கோல்கள் அடித்துள்ளார் . இவரது காலத்தில் இத்தாலி அணியும் AC மிலான் அணியும் ஐரோப்பிய ஜாம்பவான்களாக திகழ்தன. ஒரே கழகத்துடன் தனது முழு வாழ்கையையும் அர்பணித்த மல்டினி கழகத்தாலும் இத்தாலிய அணியாலும் ஈடு செய்ய முடியாத வீரராகவே திகழ்கிறார். இரண்டு சகாப்தங்களிற்கு மேலாக விளையாடிய மல்டினி 1994 அம ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார். கால்பந்து வரலாறில் ஒரு Defender இந்த விருதை வென்றது அதுவே முதல் தடவையாக இருந்தது.

மல்டினி'இன் சுருக்கமான வரலாறு :

முழு பெயர் : போலோ மல்டினி (Paolo Cesare Maldini )
பிறப்பு : 26 ஜூன் 1968
(1968-06-26)
இடம் : மிலான் , இத்தாலி (Milan, Italy )
உயரம் : 1.86 m (6 ft 1 in)

கழகம் : AC மிலான்
கனிஷ்ட அணி : மிலான்
1978-1985
சிரேஷ்ட அணி :
மிலான் 1985-2009 ( போட்டிகள் - 647 கோல்கள் - 27 )

சர்வதேச போட்டிகள் :
கனிஷ்ட அணி : போட்டிகள் - 12 கோல்கள் - 5
இத்தாலி : போட்டிகள் - 126 கோல்கள் - 7

கழக வாழ்க்கை :

1978 /79 பருவ காலத்தில் தனது 10 ஆவது வயதில் மிலான் கனிஷ்ட அணிக்காக விளையாட தொடங்கிய மல்டினி 1984 /85
பருவ காலத்தில் தனது 16 ஆவது வயதில் மிலான் அணிக்காக விளையாட தொடங்கினர். அடுத்த (1985 /86 ) பருவ காலத்திலேயே மிலான் 11 பெயர் கொண்ட அணிக்கு தொடர்ச்சியாக விளையாட ஆரம்பித்தார். 1987 /88 இல் தனது முதலாவது Serie A கிண்ணத்தை வென்ற மல்டினி மொத்தமாக 7 தடவைகள் Serie A கிண்ணத்தை மிலான் அணியுடன் வென்றார். 1991 /92 பருவத்தில் மிலான் அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் விளையாடி சாதனை படைத்தது. அப்போது மிலான் இறக்க விளையாடிய பிரான்கோ பார்சி, அலேச்சன்றோ கோஸ்டகுடா , மாரோ டாஸ்சொட் மற்றும் மல்டினி மிலான் இன் தூண்களாக விளங்கினர். இந்த 4 பேரையும் தாண்டி கோல் போட எதிர் அணிகள் திணறின.

மல்டினி 2005 ஆம் ஆண்டு தனது 571 ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம் அதிக Serie A போட்டிகளில் விளையாடியவர் என்ற டினோ சொவ் (dino zoff ) இன் சாதனையை மல்டி
னி முறியடித்தார். ஐரோப்பிய கழகங்களின் கனவுக் கிண்ணமான "Champions League " இன் 8 இறுதி ஆட்டங்களின் ஆடியுள்ள மல்டினி ஒரு cup winner 's cup இறுதி போட்டியுடன் சேர்த்து மொத்தம் 9 இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளார். 5 "Champions League " கிண்ணங்களை கைப்பெற்றிய போதும் 2005 லிவெர்பூல் அணியுடனான இறுதி போட்டி மல்டினி ஆலும் ரசிகர்களாலும் மறக்க முடியாத போட்டி. 3 -0 என முன்னிலை பெற்றிருந்த மிலான் அணி கடைசியில் அந்த போட்டியில் தோல்வியை தழுவியது. அதில் மல்டினி 51 ஆவது வினாடியில் கோல் போட்டது ஒரு வித்தியாசமான சாதனை தான். "Champions League " இன் இறுதி ஆட்டத்தில் மிகவும் வயதனவரால் போடப்பட்ட கோல் அதுவாகும். 31 -மே-2009 இல் தனது மிலான்னுடனான 25 வருட கழக வாழ்கையை முடித்து கொண்ட மல்டினி எவருடனும் ஒப்பிடிட முடியாத ஒரு கால்பந்து வீரர்.


சர்வதேச போட்டிகள் :

இத்தாலிய கனிஷ்ட அணிக்காக 1986 ஆம் ஆண்டு இவரது தந்தை cecare maldini இனால் அணிக்கு அழைக்கப்பட்ட போலோ மல்டினி
இத்தாலிய கனிஷ்ட அணிக்காக மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 5 கோல்களை போட்டுள்ளார். இத்தாலிய சிரேஷ்ட அணிக்காக 1988 ஆம் ஆண்டு விளையாட தொடங்கிய மல்டினி 1988 ஒலிம்பிக்ஸ் இல் ஒரு போட்டியில் விளையாடினார். ஆதே ஆண்டு நடைபெற்ற "யூரோ 1988 " இல் இத்தாலி அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் விளையாடினர். 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண தொடரே இவரது முதலாவது உலக கிண்ண போட்டித் தொடர். அதில் இத்தாலி அணி அரை இறுதி வரை முன்னேறியது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண தொடரில் இறுதி போட்டி வரையும் 1998 இல் நடைபெற்ற உலக கிண்ண தொடரில் கால் இறுதி போட்டி வரையும் 2002 இல் நடைபெற்ற உலக கிண்ண தொடரில் இறுதி-16 வரையும் முன்னேறிய மல்டினி இன் இத்தாலி அணியால் ஒரு உலக கிண்ணத்தை கூட இவர் காலத்தில் பெற முடியாமல் போனது சோகம் தான். "யூரோ 2000 " இல் இத்தாலி அணி இறுதி போட்டி வரை முன்னேறினாலும் கடைசியில் பிரான்ஸ் அணியிடம் தோற்றது. இத்தாலிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய பெருமையும் ( 126 போட்டி) சர்வதேச போட்டிகளில் அதிக தடவைகள் அணி தலைவராக செயற்பட்ட சாதனையையும் (74 தடவைகள்) பெற்றிருந்தாலும் மல்டினியால் ஒரு முக்கியமான சர்வதேச கிண்ணத்தை கூட பெற முடியவில்லை. இவரின் சாதனைகளை கௌரவிக்கும் முகமாக 2009 ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்துடனான சினேகா பூர்வ போட்டியில் விளையாட இவரிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தாலும் மல்டினி உத்தியோகபூர்வ போட்டி என்றால் மட்டுமே ஆட தயார் என்று கூறி அதில் ஆட மறுத்து விட்டார்.

தனிப்பட்ட வாழ்கை :

போலோ மல்தினி பற்றி பேசும் போது அவரது தந்தை சேகரே மல்டினி (CECARE MALDINI ) பற்றியும் சொல்ல வேண்டும். இவரும் AC மிலான் , இத்தாலி அணிகளுக்காக விளையாடிய மிக சிறந்த வீரர் ஆவார். அத்தடன் கழகங்கள், சர்வதேச அணிகளுக்கு முகாமையாளராகவும் செயற்பட்டவர். தனது தந்தையின் வழியை பின்பற்றி வளர்ந்தாலும் போலோ மல்டினி தனித்தன்மை வாய்ந்த வீரராகவே திகந்தார். 2003 ஆம் ஆண்டு மல்டினி தலைமையிலான மிலான் அணி ஐரோப்பிய கிண்ணத்தை (Europian cup / champions leauge) ஐ கைபெற்றியது. இது சரியாக 40 வருடங்களின் முன் இவரது தந்தையால் செய்யப்பட்ட ஒன்று. கால்பந்து வரலாற்றில் தந்தை - மகன் ஜோடி இச்சாதனையை செய்தது இதுவே ஒரே ஒரு தடவை. அத்துடன் 1994 ஆம் ஆண்டு உலக கிண்ண கனவு அணியில் இடம் பெற்றிருந்தார் மல்டினி. 1962 ஆம் ஆண்டு உலக கிண்ண கனவு அணியில் இவரது தந்தை இடம் பெற்றிருந்தார்.
அட்ரியானா என்ற மாடல் அழகியை திருமணம் செய்த மல்டினி டானியல் (2001) , கிறிஸ்டன் (1996 ) ஆகியோரின் தந்தை ஆவார். இவரது மகன் கிறிஸ்டன் தற்போது மிலான் கனிஷ்ட அணிக்காக விளையாடி வருகிறார்.



கௌரவங்கள் :


மிலான்
  • Serie A: 7
1987–88, 1991–92, 1992–93, 1993–94, 1995–96, 1998–99, 2003–04
  • Coppa Italia: 1
2002–03
  • Supercoppa Italiana: 5
1988, 1992, 1993, 1994, 2004
1988–89, 1989–90, 1993–94, 2002–03, 2006–07
  • UEFA Super Cup: 5
1989, 1990, 1994, 2003, 2007
  • Intercontinental Cup: 2
1989, 1990
  • FIFA Club World Cup: 1
2007
தனிப்பட்ட கௌரவங்கள்
  • Under-21 European Footballer of the Year: 1
1989
  • FIFA World Cup Team of the Tournament: 1
1994
  • UEFA European Championship Team of the Tournament: 3
1988, 1996, 2000
  • FIFA World Cup All-Star Team: 2
1990, 1994
  • UEFA Champions League Final Man of the Match: 1
2003
2004
  • FIFA 100: 1
  • UEFA Team of the Year: 2
2003, 2005
  • ESM Team of the Year: 4
1994–95, 1995–96, 1999–2000, 2002–03
  • FIFPro World XI: 1
2005
  • UEFA Champions League Best Defender: 1
2007
  • Italy captain: 1
1994–2002
  • UEFA Champions League Achievement Award: 1
2009
  • AC Milan all-time highest number of appearances: 1
902
  • UEFA Champions League Record of most appearances: 1
168
  • Serie A highest number of appearances: 1
647