போலோ மல்டினி (Paolo Cesare Maldini )

AC மிலான் - இந்த பெயரை கேட்ட உடன் நினைவிற்கு வருவது மல்டினி தான். 1978 ஆம் வருடம் AC மிலான் கழகத்துடன் 10 ஆவது வயதில் தொடங்கிய இவரது வாழ்க்கை 2009 ஆம் வருடம் இவர் ஓய்வு பெறும் வரை தொடர்ந்தது. இத்தாலிய கால்பந்து வீரரான மல்டினி ( 26 ஜூன் 1968 ) தனது 25 வருட வாழ்கையை Serie A கழகமான மிலான் (AC MILAN ) உடன் தொடர்ந்து தனது 40 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். அத்துடன் இத்தாலி சர்வதேச அணிக்காக 14 (1988 -2002 ) வருடங்கள் விளையாடினார். இதே அணிக்காக 126 போட்டிகளில் பங்கு கொண்ட இவர் 7 கோல்கள் அடித்துள்ளார் . இவரது காலத்தில் இத்தாலி அணியும் AC மிலான் அணியும் ஐரோப்பிய ஜாம்பவான்களாக திகழ்தன. ஒரே கழகத்துடன் தனது முழு வாழ்கையையும் அர்பணித்த மல்டினி கழகத்தாலும் இத்தாலிய அணியாலும் ஈடு செய்ய முடியாத வீரராகவே திகழ்கிறார். இரண்டு சகாப்தங்களிற்கு மேலாக விளையாடிய மல்டினி 1994 அம ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார். கால்பந்து வரலாறில் ஒரு Defender இந்த விருதை வென்றது அதுவே முதல் தடவையாக இருந்தது.
மல்டினி'இன் சுருக்கமான வரலாறு :
முழு பெயர் : போலோ மல்டினி (Paolo Cesare Maldini )
பிறப்பு : 26 ஜூன் 1968
மிலான் , இத்தாலி (Milan, Italy )
உயரம் : 1.86 m (6 ft 1 in)
கழகம் : AC மிலான்
கனிஷ்ட அணி : மிலான் 1978-1985
சிரேஷ்ட அணி : மிலான் 1985-2009 ( போட்டிகள் - 647 கோல்கள் - 27 )
சர்வதேச போட்டிகள் :
கனிஷ்ட அணி : போட்டிகள் - 12 கோல்கள் - 5
இத்தாலி : போட்டிகள் - 126 கோல்கள் - 7
கழக வாழ்க்கை :
1978 /79 பருவ காலத்தில் தனது 10 ஆவது வயதில் மிலான் கனிஷ்ட அணிக்காக விளையாட தொடங்கிய மல்டினி 1984 /85பருவ காலத்தில் தனது 16 ஆவது வயதில் மிலான் அணிக்காக விளையாட தொடங்கினர். அடுத்த (1985 /86 ) பருவ காலத்திலேயே மிலான் 11 பெயர் கொண்ட அணிக்கு தொடர்ச்சியாக விளையாட ஆரம்பித்தார். 1987 /88 இல் தனது முதலாவது Serie A கிண்ணத்தை வென்ற மல்டினி மொத்தமாக 7 தடவைகள் Serie A கிண்ணத்தை மிலான் அணியுடன் வென்றார். 1991 /92 பருவத்தில் மிலான் அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் விளையாடி சாதனை படைத்தது. அப்போது மிலான் இறக்க விளையாடிய பிரான்கோ பார்சி, அலேச்சன்றோ கோஸ்டகுடா , மாரோ டாஸ்சொட் மற்றும் மல்டினி மிலான் இன் தூண்களாக விளங்கினர். இந்த 4 பேரையும் தாண்டி கோல் போட எதிர் அணிகள் திணறின.
மல்டினி 2005 ஆம் ஆண்டு தனது 571 ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம் அதிக Serie A போட்டிகளில் விளையாடியவர் என்ற டினோ சொவ் (dino zoff ) இன் சாதனையை மல்டி
னி முறியடித்தார். ஐரோப்பிய கழகங்களின் கனவுக் கிண்ணமான "Champions League " இன் 8 இறுதி ஆட்டங்களின் ஆடியுள்ள மல்டினி ஒரு cup winner 's cup இறுதி போட்டியுடன் சேர்த்து மொத்தம் 9 இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளார். 5 "Champions League " கிண்ணங்களை கைப்பெற்றிய போதும் 2005 லிவெர்பூல் அணியுடனான இறுதி போட்டி மல்டினி ஆலும் ரசிகர்களாலும் மறக்க முடியாத போட்டி. 3 -0 என முன்னிலை பெற்றிருந்த மிலான் அணி கடைசியில் அந்த போட்டியில் தோல்வியை தழுவியது. அதில் மல்டினி 51 ஆவது வினாடியில் கோல் போட்டது ஒரு வித்தியாசமான சாதனை தான். "Champions League " இன் இறுதி ஆட்டத்தில் மிகவும் வயதனவரால் போடப்பட்ட கோல் அதுவாகும். 31 -மே-2009 இல் தனது மிலான்னுடனான 25 வருட கழக வாழ்கையை முடித்து கொண்ட மல்டினி எவருடனும் ஒப்பிடிட முடியாத ஒரு கால்பந்து வீரர்.
சர்வதேச போட்டிகள் :இத்தாலிய கனிஷ்ட அணிக்காக 1986 ஆம் ஆண்டு இவரது தந்தை cecare maldini இனால் அணிக்கு அழைக்கப்பட்ட போலோ மல்டினி இத்தாலிய கனிஷ்ட அணிக்காக மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 5 கோல்களை போட்டுள்ளார். இத்தாலிய சிரேஷ்ட அணிக்காக 1988 ஆம் ஆண்டு விளையாட தொடங்கிய மல்டினி 1988 ஒலிம்பிக்ஸ் இல் ஒரு போட்டியில் விளையாடினார். ஆதே ஆண்டு நடைபெற்ற "யூரோ 1988 " இல் இத்தாலி அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் விளையாடினர். 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண தொடரே இவரது முதலாவது உலக கிண்ண போட்டித் தொடர். அதில் இத்தாலி அணி அரை இறுதி வரை முன்னேறியது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண தொடரில் இறுதி போட்டி வரையும் 1998 இல் நடைபெற்ற உலக கிண்ண தொடரில் கால் இறுதி போட்டி வரையும் 2002 இல் நடைபெற்ற உலக கிண்ண தொடரில் இறுதி-16 வரையும் முன்னேறிய மல்டினி இன் இத்தாலி அணியால் ஒரு உலக கிண்ணத்தை கூட இவர் காலத்தில் பெற முடியாமல் போனது சோகம் தான். "யூரோ 2000 " இல் இத்தாலி அணி இறுதி போட்டி வரை முன்னேறினாலும் கடைசியில் பிரான்ஸ் அணியிடம் தோற்றது. இத்தாலிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய பெருமையும் ( 126 போட்டி) சர்வதேச போட்டிகளில் அதிக தடவைகள் அணி தலைவராக செயற்பட்ட சாதனையையும் (74 தடவைகள்) பெற்றிருந்தாலும் மல்டினியால் ஒரு முக்கியமான சர்வதேச கிண்ணத்தை கூட பெற முடியவில்லை. இவரின் சாதனைகளை கௌரவிக்கும் முகமாக 2009 ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்துடனான சினேகா பூர்வ போட்டியில் விளையாட இவரிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தாலும் மல்டினி உத்தியோகபூர்வ போட்டி என்றால் மட்டுமே ஆட தயார் என்று கூறி அதில் ஆட மறுத்து விட்டார்.
தனிப்பட்ட வாழ்கை :
போலோ மல்தினி பற்றி பேசும் போது அவரது தந்தை சேகரே மல்டினி (CECARE MALDINI ) பற்றியும் சொல்ல வேண்டும். இவரும் AC மிலான் , இத்தாலி அணிகளுக்காக விளையாடிய மிக சிறந்த வீரர் ஆவார். அத்தடன் கழகங்கள், சர்வதேச அணிகளுக்கு முகாமையாளராகவும் செயற்பட்டவர். தனது தந்தையின் வழியை பின்பற்றி வளர்ந்தாலும் போலோ மல்டினி தனித்தன்மை வாய்ந்த வீரராகவே திகந்தார். 2003 ஆம் ஆண்டு மல்டினி தலைமையிலான மிலான் அணி ஐரோப்பிய கிண்ணத்தை (Europian cup / champions leauge) ஐ கைபெற்றியது. இது சரியாக 40 வருடங்களின் முன் இவரது தந்தையால் செய்யப்பட்ட ஒன்று. கால்பந்து வரலாற்றில் தந்தை - மகன் ஜோடி இச்சாதனையை செய்தது இதுவே ஒரே ஒரு தடவை. அத்துடன் 1994 ஆம் ஆண்டு உலக கிண்ண கனவு அணியில் இடம் பெற்றிருந்தார் மல்டினி. 1962 ஆம் ஆண்டு உலக கிண்ண கனவு அணியில் இவரது தந்தை இடம் பெற்றிருந்தார்.
அட்ரியானா என்ற மாடல் அழகியை திருமணம் செய்த மல்டினி டானியல் (2001) , கிறிஸ்டன் (1996 ) ஆகியோரின் தந்தை ஆவார். இவரது மகன் கிறிஸ்டன் தற்போது மிலான் கனிஷ்ட அணிக்காக விளையாடி வருகிறார்.
கௌரவங்கள் :
- மிலான்
- Serie A: 7
-
- 1987–88, 1991–92, 1992–93, 1993–94, 1995–96, 1998–99, 2003–04
- Coppa Italia: 1
-
- 2002–03
-
- 1988, 1992, 1993, 1994, 2004
-
- 1988–89, 1989–90, 1993–94, 2002–03, 2006–07
- UEFA Super Cup: 5
-
- 1989, 1990, 1994, 2003, 2007
- Intercontinental Cup: 2
-
- 1989, 1990
- FIFA Club World Cup: 1
-
- 2007
- தனிப்பட்ட கௌரவங்கள்
- Under-21 European Footballer of the Year: 1
-
- 1989
- FIFA World Cup Team of the Tournament: 1
-
- 1994
- UEFA European Championship Team of the Tournament: 3
-
- 1988, 1996, 2000
- FIFA World Cup All-Star Team: 2
-
- 1990, 1994
- UEFA Champions League Final Man of the Match: 1
-
- 2003
-
- 2004
- FIFA 100: 1
- UEFA Team of the Year: 2
-
- 2003, 2005
- ESM Team of the Year: 4
-
- 1994–95, 1995–96, 1999–2000, 2002–03
- FIFPro World XI: 1
-
- 2005
- UEFA Champions League Best Defender: 1
-
- 2007
- Italy captain: 1
-
- 1994–2002
- UEFA Champions League Achievement Award: 1
-
- 2009
- AC Milan all-time highest number of appearances: 1
-
- 902
- UEFA Champions League Record of most appearances: 1
-
- 168
- Serie A highest number of appearances: 1
-
- 647

hi friend nice aticle, may i hv your mail addess please.
ReplyDeletehey bro, thanx... narsuthan@gmail.com
ReplyDeletegrt
ReplyDelete